×

மாற்றுத்திறனாளிகள் விபத்தில் இறந்தால் இழப்பீடு2லட்சமாக உயர்வு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியத்தின் வாயிலான வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித்தொகையினை 2023-2024ம் நிதியாண்டு முதல் உயர்த்தி வழங்க, கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் விபத்தினால் இறந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், கை அல்லது கால் இழப்பு, இரு கண்பார்வை இழந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம், மருத்துவ செலவினம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம், ஆல்பாபடுக்கை வாங்க ரூ.6 ஆயிரம், கல்வி உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரம், முதுகலை பட்டப்படிப்பு, சட்டம், மருத்துவம், தொழிற்கல்வி பயில ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும். அதேபோன்று விடுதியில் பயிலும் மாற்றுத்திறனாளி மகன் மற்றும் மகளுக்கு ரூ.2,500 வழங்கப்படும். இந்த தொகையினை வழங்க மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

The post மாற்றுத்திறனாளிகள் விபத்தில் இறந்தால் இழப்பீடு2லட்சமாக உயர்வு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Chennai ,Secretary of ,Department of ,Persons with Disabilities ,Anandakumar ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...